பெட்ரோலிய ரசாயன மண்டலம் திட்டத்தால் மீனவர்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவார்கள்
பெட்ரோலிய ரசாயன மண்டலம் திட்டத்தால் மீனவர்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவார்கள் என்று, டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி. கூறினார்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் ‘ பெட்ரோலிய ரசாயன மண்டலம் திட்டத்தை எதிர்த்து பா.ம.க. சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவபாலன் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாயத்தை அழிக்கும் பெட்ரோலிய ரசாயன மண்டலம் திட்டம் நமக்கு வேண்டாம், வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் இந்த திட்டத்தை தொடங்க முடியாது. சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த திட்டத்தை கேரளாவில் மக்கள் எதிர்த்ததால் அங்கு கைவிடப்பட்டது. மேற்கு வங்காளம் நந்தி கிராமத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இத்திட்டத்தை தொடங்கிய போது ஒட்டு மொத்த மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 14 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள் இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மம்தா பானர்ஜி பதவிக்கு வந்ததும் அத்திட்டத்தை ரத்து செய்தார்.
கடலூர் சிப்காட்டில் 600 ஏக்கரில் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. தொழிற்சாலைகள் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இப்போது அந்த பகுதி மக்கள் வாழ தகுதியற்றதாகி விட்டது. எனவே அதைவிட 100 மடங்கு பாதிப்பு இத்திட்டத்தால் டெல்டா பகுதியில் ஏற்படும். இத்திட்டத்தின் கீழ் ஐந்து அல்லது ஆறு தொழிற்சாலைகள் இப்பகுதியில் தொடங்க இருப்பதால் அனைத்து கழிவுகளும் கடலுக்கு சென்றுசேரும். இதனால் கடல்நீர் மாசுபட்டு மீனவர்கள் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
இதைப்போல சீர்காழி வட்டத்தில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாதானம் கிராமத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.