முதன் முதலாக கிராமத்து கதையில் நடித்துள்ளேன் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் முதன் முதலாக கிராமத்து கதையில் நடித்துள்ளதாக சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலம்,
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ வருகிற 11-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “பொதுவாக எம்மனசு தங்கம்,’ முதன் முதலாக நான் நடித்துள்ள கிராமத்து கதை. சமூகத்துக்கு தேவையான விழிப்புணர்வை சொல்லியிருக்கும் படம். வேறு ஒரு நிறுவனம் தயாரித்த படத்தில், முதல் முறையாக நான் நடித்துள்ளேன். வில்லனாக பார்த்திபன் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக வருவார். என் கூடவே வரும் நண்பராக, ‘டைகர் பாண்டி’ என்ற வேடத்தில் சூரி நடித்து இருக்கிறார். ‘பொதுவாக எம்மனசு தங்கம்,’ இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து ஒரு வித்தியாசமான படமாக இருக்கும்.
வரி விலக்கு தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது. நான் தயாரித்த படங்களில் வரி விலக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாகவே பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இதற்காக நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது.
நான் தமிழ் பெயர்களை வைத்தாலும் வரிவிலக்கு பெற முடியவில்லை. ஆனால் ஒரே ஒரு படத்திற்கு மட்டும் வரி விலக்கு கிடைத்துள்ளது. அரசியலுக்கு வர எனக்கு ஆசை இல்லை. ஆனால் நான் பிறந்ததில் இருந்தே தி.மு.க.வில் உள்ளேன். கமல், ரஜினி குறித்த அரசியல் யூகத்திற்கு பதில்சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிவேதா பெத்துராஜ், நடிகர் பார்த்திபன், சூரி இயக்குனர் தளபதி பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.