விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
நூற்றாண்டு விழாவை யொட்டி விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி. ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி அரங்கம் திறப்பு விழா விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சக்கரபாணி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பிருந்தாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவகுரு அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நாட்டின் பல்வேறு தலைவர்களை சந்தித்தபோதும், அவர் தொடங்கி வைத்த மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாகவும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிம்டன்ஜீத் சிங் கஹ்லான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோஇருதயசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தரராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், வேலு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் வக்கீல் செந்தில், ராமதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.