தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-08-05 20:30 GMT
நெல்லை,

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆறு கடந்த 16–ந் தேதி சுத்தம் செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக ஆற்றை சுத்தம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி முதற்கட்டமாக கருப்பந்துறை முதல் வடக்கு புறவழிச்சாலை பாலம் வரை 4.85 கி.மீட்டர் து£ரத்துக்கு ஆற்றின் இரண்டு கரைபகுதியிலும், மொத்தம் சுமார் 10 கி.மீட்டர் து£ரத்திற்கு து£ய்மை பணி மேற்க்கொள்ளப்பட்டது.

இதில் 20 கல்லு£ரிகளைச் சேர்ந்த 1500 மாணவ மாணவியர்கள் மற்றும் 500 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 7 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துழைப்போடு இந்த பணி சிறப்பாக செய்யப்பட்டது. தற்போது சுத்தம் செய்யப்பட்ட இடங்களை தொடர்ந்து சுத்தமாக பாராமரிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எந்தந்த இடங்களில் எவ்வகையான குப்பைகள் அதிகம் சேர்கின்றன என்பதை கன்டறிந்து, அவற்றை முறையாக அப்புறப்படுத்தவும், தேவைப்படும் இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

கழிப்பிட வசதிகள்

மேலும் தேவைப்படும் இடங்களில் கழிப்பிட வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்துத்தரப்பினரும் பங்கேற்க்கும் வகையில் சுத்தம் செய்யப்பட உள்ள இடங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் விளம்பரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

அதிகாரிகள்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, உதவி கலெக்டர் மைதிலி, அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்