தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2017-08-05 21:00 GMT

வள்ளியூர்,

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதிசய பனிமாதா ஆலயம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடைபெற்றது. மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியை பங்குதந்தை ஜான்சன்ராஜ் அடிகளார், சத்தியநேசன் ஆகியோர் அர்ச்சித்து, தர்மகர்த்தா ஆனந்தராஜா கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் இயக்குனர் ஜோசப் இசிதோர் அடிகளார் மறையுரை வழங்கினார்.

தேர்பவனி

தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடைபெற்றது. 8–ம் திருவிழா அன்று மாலையில் வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில், நற்கருணை பவனி, மறையுரை நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்கினார். தொடர்ந்து மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில், சாகச நிகழ்ச்சி நடந்தது. 9–ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி பவனி வந்து காட்சி அளித்தார். பின்னர் தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 10–ம் திருவிழாவான நேற்று கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜாண்சன்ராஜ், உதவி பங்கு தந்தை கிங்ஸ்டன், தர்மகர்த்தா ஆனந்தராஜா, தெற்குகள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறைமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்