பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பது குறித்து பெண் போலீசாருக்கு பயிற்சி
பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பது குறித்து பெண் போலீசாருக்கான பயிற்சி முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் தொடங்கி வைத்து பேசினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு மனஅழுத்தத்தை குறைப்பதற்கான ஒருநாள் பயிற்சி முகாம் சுரக்ஷா சமூக மற்றும் குடும்ப நல அமைப்பு சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.
முகாமுக்கு, சுரக்ஷா அமைப்பின் துணைத்தலைவர் சுவர்ணலதா ராஜூ தலைமை தாங்கி பேசினார். அறங்காவலர் அனிதா நடராஜன் முகாமின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பொதுவாகவே, மற்ற துறைகளை காட்டிலும் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால், ஆண் மற்றும் பெண் போலீசார் என இருவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். மனஅழுத்தமே பல்வேறு பிரச்சினைக்கு காரணமாகிறது. அதனை கருத்தில் கொண்டுதான், போலீசாருக்கு இருக்கும் மனஅழுத்தத்தை குறைப்பதற்காகவும், குழப்பமான சூழ்நிலைகளை சுமுக வழிமுறையில் தீர்வு காணவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாம், மாதம் ஒரு முறை நடத்தப்படவேண்டும். ஆனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுக்கூட்டம், அரசியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடப்பதால், பாதுகாப்பு பணிக்கு போலீசார் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, இந்த பயிற்சிமுகாமை குறைந்தது 2 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம், போலீசாரின் மனஅழுத்தத்தை குறைத்து, அவர்கள் மன அமைதியுடன் பணியில் ஈடுபட உதவி செய்யும். எனவே, அனைத்து போலீசாரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில், எதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது, பணியில் பெண் போலீசாருக்கு ஏற்படும் பிரச்சினைகள், குழப்பங்களை கையாள்வது, மனஅழுத்தம் குறைத்தல் போன்றவை குறித்து பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். முன்னதாக, உறுப்பினர் ஸ்ரீராம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முடிவில், சுரக்ஷா அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவரும், போலீஸ் சூப்பிரண்டின் மனைவியுமான அஞ்சனா தர்மராஜன் முகாமில் கலந்து கொண்ட பெண் போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இதில் 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 36 பெண் போலீசார் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர்.