தாளவாடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தாளவாடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அப்போது அதிகாரியின் ஜீப்பை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
தாளவாடி,
தாளவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் நெய்தாளபுரம் கிராமம் உள்ளது. இங்கு 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணி அளவில் காலிக்குடங்களுடன் நெய்தாளபுரம் அருகே உள்ள தாளவாடி செல்லும் சாலையில் ஒன்று கூடினார்கள். அப்போது அந்த வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடி செல்லும் அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் நெய்தாளபுரம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள தோட்டங்களுக்கு ஆண்கள் சைக்கிளிலும், பெண்கள் நடந்து தண்ணீர் எடுத்துக்கொண்டும் வருகிறார்கள். இதனால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை.
இதுகுறித்து கடந்த 2 மாதங்களாக அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டோம். வட்டார வளர்ச்சி அதிகாரி இங்கு வந்து புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்று உறுதி கூறினால் தான் கலைந்து செல்வோம்’ என்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் 10.30 மணி அளவில் வட்டார வளர்ச்சி அதிகாரி பெருமாள் அங்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். இதைப்பார்த்ததும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அவரது ஜீப்பை வழிமறித்து தடுத்து நிறுத்தி சிறைபிடித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வட்டார வளர்ச்சி அதிகாரி ஜீப்பை விட்டு கீழே இறங்கி பொதுமக்களிடம், ‘ஆழ்துளை கிணற்றை பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றார்.
பின்னர் ஆழ்குழாய் கிணற்றை பார்த்துவிட்டு அங்கு வந்த அதிகாரி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தகவல் அறிந்து நிலவருவாய் ஆய்வாளர் பூவேந்திரனும் அங்கு வந்தார். அவர்களிடம் பொதுமக்கள், ‘நெய்தாளபுரம் பகுதிக்கு 2 அல்லது 3 நாட்களில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம்’ என்றனர்.
அதைத்தொடர்ந்து நில வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன், ‘புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தர நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று பொதுமக்களிடம் எழுதிக்கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து மதியம் 12.30 மணி அளவில் கலைந்து சென்றனர்.
இதனால் நெய்தாளபுரம் அருகே தாளவாடி செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.