தேவூர் அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தேவூர் அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவூர்,
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை மூடிவிட்டு வேறு இடத்தில் அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, இந்த கடையை தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி ஊராட்சி பாலிருச்சம்பாளையம் பகுதியில் அமைக்க அதிகாரிகள் முயன்றனர். ஆனால், அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்குள்ள சோளக்கவுண்டனூர் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக அங்கு மதுக்கடை அமைக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர்.
ஆனால், 3-வது இடமாக தேவூர் அருகே கோனேரிப்பட்டி ஊராட்சி கைகோளபாளையம் பாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக அந்த இடத்தில் ஒரு கடை கட்டப்பட்டது.
இந்த கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கைகோளபாளையம், சுண்ணாம்புகரட்டூர், வெள்ளபிள்ளையார் கோவில், மேட்டுபாளையம், குண்டன் தெரு, சோளக்கவுண்டனூர், பாலிருச்சம்பாளையம், வீரக்குட்டிபாளையம், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், தேவூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள், கடை அருகே சாமியானா பந்தல் அமைத்து கடந்த 3 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பகுதியில் மதுக்கடையை திறக்க விடமாட்டோம் என்று அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் தர்ணாவில் ஈடுபட்டு வந்த பெண்களும், ஆண்களும் நேற்று காலை 10 மணியளவில் கைகோளபாளையம் பாலம் பஸ் நிறுத்தத்தில் திரண்டு எடப்பாடி-குமாரபாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் பெண்களும், மாணவிகளும் இந்த வழியாக நடந்து செல்லவே முடியாது. எனவே, இங்கு மதுக்கடையை திறக்கக்கூடாது“ என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலையும், தர்ணாவையும் கைவிட்டு கலைந்து செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.