மாவட்டம் முழுவதும் நாளை குரூப்-2 போட்டித்தேர்வை 23,364 பேர் எழுதுகின்றனர்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 போட்டித் தேர்வை 79 மையங்களில் 23,364 பேர் எழுதுகின்றனர்.
நாமக்கல்,
இது தொடர்பாக கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குரூப்-2 பிரிவில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள 79 மையங்களில் நடக்கிறது. இதை மொத்தம் 23 ஆயிரத்து 364 தேர்வர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வுக்கு பணிக்கு 79 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 79 ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்்்.
மேலும் இப்பணிக்காக துணை கலெக்டர், துணை இயக்குனர், உதவி இயக்குனர் நிலையில் 11 பறக்கும் படை அலுவலர்களும், துணை தாசில்தார் தலைமையில் 16 நடமாடும் குழுவினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய 52 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து இணையதள மையங்களும் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தரைத்தளத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேர்வு மையத்தில் தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனிவருங்காலங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு நிரந்தரமாக தடைவிதிக்கப்படும் என்பதால், அனைத்து தேர்வர்களும் தேர்வாணைய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தேர்வு எழுத வேண்டும்.
மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின் சாதன பொருட்கள் எதையும் கொண்டு வரக் கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு முடிந்த பின்னரே தேர்வுக் கூடத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.