மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு: விடைத்தாள்களின் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களின் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-04 22:33 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விடைத்தாள்களின் நகல்

ஜூன்-2017 மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் scan.tndge.in என்ற இணைய தள முகவரி யில் உள்ள Application for Retotalling / Revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

3 நாட்களுக்குள்...

மாணவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து வருகிற 7-ந் தேதி காலை 10 மணி முதல் 9-ந் தேதி மாலை 5 மணி வரை 3 நாட்களுக்குள் மேல்நிலைக் கல்வி தேர்வுப்பிரிவு, 4-ம் தளம், பி-பிரிவு, பள்ளிக் கல்வி இயக்ககம், அண்ணாநகர், புதுச்சேரி-5 என்ற முகவரியில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்