2019-ம் ஆண்டுக்கு பிறகே தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் திருச்சியில் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-;

Update:2017-08-05 05:00 IST
செம்பட்டு,

தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பாரதீய ஜனதா ஆட்சியை கண்டு பயந்து இருக்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் அவர் ரசிகர் மன்றம் தொடங்கி படிப்படியாக வளர்ந்து வருகிறார். எனவே கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் சிறப்பாக செயல்படுவார். சின்னத்தை பார்த்து வாக்கு அளிக்காமல், எண்ணத்திற்கு ஏற்ப வாக்களிக்க வேண்டும்.

சென்னையில் அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் சமாதி இருக்கிறது. அதை யெல்லாம் அகற்றாமல் சிவாஜி சிலையை போக்குவரத்தை காரணம் காட்டி அகற்றி இருக்கிறார்கள். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைவது நல்லது என சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் விவசாயிகள் செத்தாலும் நல்லது என்று குறிப்பிடுபவர்கள். அவர்கள் எவர் மீதும் அக்கறை கொள்ளாதவர்கள். தமிழகத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பின் எவ்வித மாற்றமும் நிகழாது. 2019-ம் ஆண்டுக்கு பிறகே தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்