எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்
35 ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவனாக இருந்த போது எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் நேரத்தில் திருச்சியை சேர்ந்த ஆசிரியர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
திருச்சி,
கல்விக்கண் திறந்த காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இதனை எம்.ஜி.ஆர். தமிழக முதல் - அமைச்சராக இருந்த போது சத்துணவு திட்டமாக மாற்றினார். ‘முதல் - அமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டம்’ என அதற்கு பெயர் சூட்டப்பட்டது.
1982-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி என்ற இடத்தில் சத்துணவு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் ஆக இருந்த சாந்தா ஷீலா நாயர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். குழந்தைகளுடன் அங்கேயே அமர்ந்து எம்.ஜி.ஆரும் உணவு சாப்பிட்டார். பின்னர் சத்துணவு திட்ட உயர்மட்ட குழு உறுப்பினரும், ‘தினத்தந்தி’ அதிபருமான மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நினைவாக வழங்கிய நன்கொடையில் சத்துணவு கூடம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் எம்.ஜி.ஆர். நாட்டினார்.
காட்டூர் பாப்பாக்குறிச்சியில் அன்று எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த இடத்தில், தற்போதும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. தமிழக அரசால் பாரம்பரிய நினைவு சின்னம் போல் புனரமைப்பு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்த கட்டிடத்தில் எம்.ஜி.ஆர். தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டபோது, அவருக்கு இடதுபுறம் சின்னஞ்சிறிய பள்ளி மாணவன் ஒருவரும், வலதுபுறம் மாணவி ஒருவரும் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படம் ஒன்று வரலாற்றுச்சுவடு போல் இன்றும் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சியால் 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மக்கள் திலகமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது எம்.ஜி.ஆரின் அரிய சாதனைகள் பற்றிய தொகுப்புகளை தினத்தந்தி திரட்டியபோது, திருச்சி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் தொடங்கிய போது அவருடன் அமர்ந்து சாப்பிட்ட சிறுவனை பற்றிய தகவல் கிடைத்தது.
35 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட பாலகன் இன்று வளர்ந்து 40 வயதை தொட்டு விட்டார். அவரது பெயர் கே. புஷ்பராஜ். எம்.எஸ்சி., பி.எட் படித்து உள்ள இவர் தற்போது ஆசிரியர் பணியை செய்து வருகிறார். காட்டூர் பாத்திமாபுரத்தில் வசித்து வரும் இவரது மனைவி பெயர் ஜூலி மேரி. இந்த தம்பதியினருக்கு மேஷா (வயது5) என்ற பெண் குழந்தையும், ஆண்டோ (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளன. புஷ்பராஜின் தந்தை பெயர் குழந்தைசாமி, தாயார் ஞானசவுந்தரி நிர்மலா மேரி.
ஆசிரியர் புஷ்பராஜை ‘தினத்தந்தி’ சார்பில் சந்தித்த போது எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதை பற்றி நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-
நான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை காட்டூர் பிலோமினாள் நடுநிலைப்பள்ளியிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை காட்டூர் அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன். உருமு தனலட்சுமி கல்லூரியில் பி.எஸ்சி,யும், திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.எஸ்சி.யும் அதன் பின்னர் பி. எட். டும் படித்து விட்டு ஐந்தாண்டு காலம் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் ஆசிரியராக பணியாற்றினேன். தற்போது வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நிறுவனம் ஒன்றில் தொழில் நுட்ப பயிற்சி ஆசிரியராக கல்வி பணியாற்றி வருகிறேன்.
எனது தந்தை அரசு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்தார். எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சாப்பிட்ட நேரத்தில் நான் ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று காலை எப்போதும் போல் பள்ளிக்கு சென்றேன். பள்ளிக்கு சென்றதும் எனது ஆசிரியர் ‘நீ சி.எம். முடன் அமர்ந்து சாப்பிடவேண்டும் வா’ என கூறி அழைத்து சென்றார். அறியாப்பருவம் என்பதால் எனக்கு அப்போதும் சி.எம். என்றால் என்ன என்றே தெரியவில்லை. மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் உள்ள பந்தியில் என்னை அமர வைத்தனர். சுற்றிலும் வெள்ளை வேட்டி சட்டை அணிந்த பலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது எனது அருகில் எம்.ஜி.ஆர். வந்து அமர்ந்தார். அவர் அமர்ந்ததும் சாப்பிட தொடங்கினோம். தம்பி நன்றாக சாப்பிடு, சாப்பாடு நன்றாக இருக்கிறதா? என கேட்டுக்கொண்டே எம்.ஜி.ஆர் சாப்பிட்டார். 35 ஆண்டு களுக்கு முன் நடந்ததை இப்போது நினைத்தாலும் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதை எனது தந்தையார் அடிக்கடி பெருமையுடன் என்னிடம் கூறி இருக்கிறார். நான் பத்தாம் வகுப்பு படித்த போது தான் நாம் எவ்வளவு பெரிய தலைவருடன் சாப்பிட்டு இருக்கிறோம் என்பது எனக்கு தெரியவந்தது. பாலர் பருவத்திலேயே நான் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதையும் அதுவும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தின் தொடக்க விழாவில் வரலாற்று நாயகனின் அருகில் அமர்ந்து இருந்ததையும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன் அரசு ஆதிதிராவிடர் மேல் நிலைப்பள்ளியில் இருந்து என்னிடம் பழைய புகைப்படத்தை காட்டி அது நான் தானா என்பதை உறுதி செய்து கொண்டனர்.
எம்.ஜி.ஆருக்கு அருகில் இருந்து சாப்பிட்ட இன்னொரு மாணவி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் எனது நண்பர்களிடம் ‘நான் எம்.ஜி.ஆருடனே அமர்ந்து சாப்பிட்டவன் டா’ என அடிக்கடி பெருமையாக கூறுவது உண்டு. ஆனால் நண்பர்கள் அதனை நம்பவில்லை. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அந்த தலைவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் என்னைப்பற்றிய தகவல்களை திரட்டி வெளியிடுவதை நினைத்து பார்த்தாலே பெருமையாக இருக்கிறது. தமிழக அரசு எனக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த 1982-ம் ஆண்டு பாப்பாக் குறிச்சி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் எல்லைக்குட்பட்ட கிராம ஊராட்சியாக இருந்தது. அப்போது திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையராக இருந்த நாராயணசாமி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
எனக்கு தற்போது 83 வயதாகிறது. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த போது அந்த விழா ஏற்பாடுகளை செய்தவர்களில் நானும் ஒருவன். அப்போதைய தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் நான் உள்பட சிலரே எம்.ஜி.ஆர். சாப்பிட்ட போது அருகில் இருந்தோம். அந்த அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு பலமாக இருந்தது. எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சாப்பிட்ட சிறுவன் பற்றிய தகவல்களை மிகவும் சிரமப்பட்டு திரட்டுவதற்கு நானும் உதவி புரிந்து உள்ளேன். எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சாப்பிட்ட மாணவி பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அந்த மாணவி பற்றிய தகவல்களையும் தினத்தந்தி திரட்டி வெளியிட்டால் உதவியாக இருக்கும் என கருதுகிறேன். நான் அரசு துறையில் துணை கலெக்டர் வரை பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மலரும் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மாணவியின் படமும் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. அந்த மாணவி யார்? இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அந்த மாணவி பற்றிய தகவல் தெரிந்தால் திருச்சி ‘தினத்தந்தி’ அலுவலகத்துக்கு 0431-2401561, 2401562 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.