71 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

ஓரடியம்புலத்தில் நடைபெற்ற விழாவில் 71 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

Update: 2017-08-04 22:30 GMT
வாய்மேடு,

வேதாரண்யம் வட்டம் ஓரடியம்புலத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் வருவாய்த்துறை சார்பில் 55 பேருக்கு வீட்டுமனை பட்டா, 6 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான சாலை விபத்து நிவாரண தொகை, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 10 பேருக்கு மாதம் ரூ.1,000 வீதம் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணை உள்பட 71 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

இதில் நாகை உதவி கலெக்டர் கண்ணன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பத்மாசவுரிராஜன், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்