நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா
108 பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக நாகாத்தம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
வண்டலூர்,
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயா நகரில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 108 பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக நாகாத்தம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
இதில் அ.தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருவாக்கு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.