காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் லாரிகளுக்கு பதிவு சரிபார்த்தல் முகாம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் லாரிகளுக்கு பதிவு சரிபார்த்தல் முகாம் வருகிற 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்கிறது.

Update: 2017-08-04 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் ஏற்றும் லாரிகளுக்கு பதிவு சரிபார்த்தல் முகாம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வரும் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5½ மணி வரை நடைபெற உள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணையத்தளத்தில் முதலில் பதிவு செய்து அதன் பதிவு சான்றிதழ் ஒப்புதல் மற்றும் லாரியின் ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி கட்டியதற்கான ரசீது போன்றவற்றின் அசல் ஆவணங்கள் மற்றும் அதன் நகலை இந்த முகாமிற்கு கொண்டு வரவேண்டும்.

பதிவுகளை உறுதி செய்வார்கள்

இந்த முகாமில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பொதுப்பபணித்துறை அலுலவர்களால் மேற்கண்ட பதிவு சான்றிதழின் ஒப்புகை சீட்டில் உள்ள விவரங்களை அசல் ஆவணங்களை கொண்டு ஆய்வு செய்து பதிவுகளை உறுதி செய்வார்கள்.

எனவே இந்த முகாமை அனைத்து லாரி உரிமையாளர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படு கிறார்கள்.

அப்போது மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்தையா உடனிருந்தார். 

மேலும் செய்திகள்