தாடிக்கொம்பு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீர் விவசாயிகள் வேதனை
தாடிக்கொம்பு அருகே குளத்தின் மதகுகள் உடைந்ததால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேடசந்தூர்,
தாடிக்கொம்பு அருகே சீத்தசாலைப்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் குளத்தின் மதகுகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த தண்ணீர் வேடசந்தூர் அருகே அரியப்பித்தம்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் பயிர்களை நாசமானது. பின்னர் அங்குள்ள ஓடைகள் வழியாக குடகனாறை தண்ணீர் சென்றடைந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் பலத்த மழை பெய்தது. ஆனால் குளத்தின் மதகுகள் உடைந்ததால் தண்ணீர் முழுமையாக வெளியேறியுள்ளது. தற்போது குளத்தில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.
குளம் நிரம்பியிருந்தால் தாடிக்கொம்பு, வேடசந்தூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை. மதகுகளில் உடைப்பு ஏற்பட்டதுமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. ஆனால் அவர்கள் நேற்று தான் மதகுகளில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தனர்.
உடைப்பு ஏற்பட்டதுமே அதனை சரிசெய்திருந்தால் குளம் முழுமையாக நிரம்பியிருக்கும். அதன் மூலம் விவசாய பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால் தற்போது தண்ணீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் பயிர்கள் நாசமானது. இது எங்கள் பகுதி விவசாயிகளை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.