நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறை
பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறை மற்றும் அகில இந்திய நிறுவன செயலாளர்கள் கூட்டமைப்பு இணைந்து கம்பெனி சட்டம் 2013– என்ற தலைப்பில் ஒரு பயிற்சி பட்டறை நடத்தியது.
மனோன்மணியம் சுந்தரனார் அரங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அகில இந்திய நிறுவன செயலாளர்கள் கூட்டமைப்பு மதுரை கிளையின் தலைவர் நாகசுந்தரம் வரவேற்றார். மேலாண்மை துறை பேராசிரியரும், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான மாதவன் வாழ்த்தி பேசினார். கூட்டமைப்பின் துணை தலைவர் அசோக்குமார் தீட்சித் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், நிறுவனத்தின் பங்குகளை சிறப்பான நிதி நிலை அறிக்கைகள் தான் உயர்த்தும். நிதி நிறுவன அறிக்கைகள் நிறுவனங்களின் நிலைகளை மக்களிடமும், முதலீட்டாளர்களிடமும் எடுத்துரைப்பதில் ஒரு பாலமாக நிறுவன செயலாளர்கள் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு இத்துறையில் பிரகாசமான வேலைவாய்ப்புகள் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் நிறுவன செயலாளர்கள் ராஜ் பிரகாஷ், ராஜவேலு, சீனிவாசன் உள்பட ஆராய்ச்சி மாணவ–மாணவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். வணிகவியல் துறை தலைவர் ரேவதி நன்றி கூறினார்.