கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
கோவை,
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 337 அங்கன்வாடி மைய பணியாளர்கள், 200 குறு மைய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 586 உதவியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு மற்றும் இன சுழற்சியின் அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் குறுமைய அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கான தகுதிகள் விவரம் வருமாறு:-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி அன்று 25 வயது நிறைவடைந்தும், 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். விதவை, கணவரால் கைவிடப் பட்டவர் மற்றும் மலைவாழ் பெண்ணாக இருப்பின் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பொது மக்களிடம் நன்றாக பேச தெரிந்தவராகவும், சமூக பணிகளில் அக்கறை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். காலிப்பணியிடம் உள்ள அதே கிராம வார்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
அதேபோல் மலைவாழ் பெண்களுக்கான தகுதிகள், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி அன்று 20 வயது முதல் நிறைவடைந்தும் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். இதுதவிர மேற்கண்ட அனைத்து தகுதிகள் அடங்கும்.
அங்கன்வாடி மைய உதவியாளர் பணிக்கான தகுதிகள், நன்றாக எழுத, படிக்க தெரிந்தவராக இருக்கவேண்டும். வயது வரம்பு மலைவாழ் பெண்களுக்கான வயது பொருந்தும். இதில் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் மலைவாழ் பெண்களாக இருப்பின் 21 வயது முதல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும். காலிப்பணியிடங்கள் உள்ள அதே கிராம வார்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் அதே கிராம ஊராட்சியை சேர்ந்த அருகில் உள்ள பிற குக்கிராமங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சியில் வசிப்பவர்கள் காலிப்பணியிடம் உள்ள அதே வார்டில் தகுதியான நபர் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள வார்டில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் கல்வி, வயதுக்கான சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி வரி ரசீது இதில் ஏதாவது ஒரு ஆவணத்தை இணைக்கவேண்டும்.
அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்கள் மைய வாரியான இன ஒதுக்கீடு விவரம் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்படும். காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் வருகிற 17-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
பின்னர் தகுதிவாய்ந்த நபர்களுக்கு நேர்முக தேர்வுக்கான நாள், இடம் உள்ளிட்ட விவரங்களை கடிதம் மூலம் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலரால் வழங்கப்படும். உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.