குந்தா, பில்லூர் அணைகள் ரூ.260 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும்
ரூ.260 கோடி மதிப்பீட்டில் குந்தா, பில்லூர் அணைகள் தூர்வாரப்படும் என்று சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா கூறினார்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.முத்தையா தலைமை தாங்கினார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும், பைக்காரா-மாயார் நீர் மின் திட்டம் மற்றும் குந்தா நீர் மின் திட்டம் ஆகிய திட்டங்களில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மின் நிலையங்களில் உள்ள மின் ஊக்கிகளின் நிலை, அணைகளில் நீர் இருப்பு மற்றும் அதற்கு ஈடான மின் உற்பத்தி அளவுகள், கடந்த 5 ஆண்டுகளில் மின் நிலையங்களின் மின் உற்பத்தி செயல் திறன் குறித்து ஆலோசிக்கப் பட்டது.
மேலும் கூடலூர் பகுதியில் மின் நுகர்வோர்கள் நலன் கருதி சீரான மின்சாரம் வழங்க துணை மின் நிலையம் அமைக்கவும், கோத்தகிரி வட்டத்தில் உள்ள கோடநாடு, கெரடா மட்டம், ஈளாடா, நெடுகுளா, மேடநாடு மற்றும் சேரம்பாடி, உப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மின்னழுத்த குறைபாடுகளை சீர்செய்ய துணை மின் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக நிலப்பரப்பில் தேயிலை விளைவிக்கப்படுவது, தேயிலை மகசூலை பெருக்க என்ன வழிமுறைகளை மேற்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மின்சார வாரியம் மற்றும் தேயிலை தோட்டக்கழக துறைகளின் குறைகளை கேட்டறிந்த குழு தலைவர் எஸ்.முத்தையா, இரு துறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக கோளாறுகள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக ஆய்வு நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். டேன்டீ தேயிலை தோட்டம் வனப் பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால், அதனை விரிவுப் படுத்த முடியாது. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் மற்றும் மருத்துவம் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப் படும்.
உலக வங்கி உதவியுடன் ரூ.260 கோடி மதிப்பீட்டில் குந்தா அணை மற்றும் கோவையில் உள்ள பில்லூர் அணை தூர்வாரப்படும். இத்திட்டத்தின் கீழ் அவலாஞ்சி, எமரால்டு, முள்ளி, போர்த்திமந்து, முக்குருத்தி உள்ளிட்ட அணைகளும் சீரமைக்கப்படும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த சில்லல்லா நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசின் குழு ஒப்புதல் அளிக்கவில்லை.
காட்டுக்குப்பை நீர் மின் திட்டத்துக்கான பணிகள் தொடங்க டெண்டர் விடுவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. டெண்டர் விட்டதும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் உள்பட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் உள்பட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.