டாஸ்மாக் கடையை இடமாற்றும் பிரச்சினை பா.ம.க. துணைத்தலைவரிடம் கலெக்டர் விசாரணை

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்த வழக்கை தொடர்ந்துள்ள பா.ம.க. மாநில துணைத்தலைவர் திலகபாமாவிடம், கலெக்டர் சிவஞானம் நேரடி விசாரணை நடத்தினார்.

Update: 2017-08-04 22:30 GMT
விருதுநகர்,

சிவகாசி அய்யனார் காலனியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரி பா.ம.க. மாநில துணைத்தலைவர் திலகபாமா மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 17-ந்தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட இடத்தை நேரடி ஆய்வு செய்தும், மனுதாரரை விசாரணை செய்தும் இம்மாதம் 7-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நேற்று திலகபாமா, கலெக்டர் விசாரணைக்காக ஆஜரானார். கடையை இட மாற்றம் செய்யவேண்டியதன் அவசியத்தை அவர் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அருகே 2 பள்ளிக் கூடங்கள், குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருப்பதை கலெக்டர் சிவஞானத்திடம் தெரிவித்ததாகவும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் விசாரணை முடிந்து வந்த திலகபாமா தெரிவித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் வந்திருந் தனர்.

மேலும் செய்திகள்