சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலைய புதிய கட்டிடத்தை செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Update: 2017-08-04 21:00 GMT

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலைய புதிய கட்டிடத்தை செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

போலீஸ் நிலையத்துக்கு...

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தை அடுத்த சங்கரலிங்கபுரத்தில் போலீஸ் நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து நாகலாபுரம்– சாத்தூர் ரோட்டில் ரூ.44 லட்சம் செலவில் அந்த போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது.

அமைச்சர் திறந்தார்

மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முருகவேல் வரவேற்று பேசினார். செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.

பெயர் பலகை திறப்பு

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) கந்தசாமி, அ.தி.மு.க. (அம்மா அணி) மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், உமா மகேசுவரி எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பின்னர் போலீஸ் நிலைய பெயர் பலகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் திறந்து வைத்தார்.

விழாவில் சுந்தரராஜ் எம்.எல்.ஏ., தாசில்தார் செல்வகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ் (புதூர்), ராமையா (எட்டயபுரம்), சப்– இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்