ஆயுதங்களை பதுக்கி வைத்த வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் ஆயுதங்களை பதுக்கி வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-04 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சின்னக்கடை ஒத்தகடை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தள்ளு வண்டி டீக்கடை அருகில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வாள், கத்தி போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் பாசிபவளக்காரத்தெருவை சேர்ந்த காஜாமுகைதீன் என்பவருடைய மகன் செய்யது அப்தாகீர்(வயது 33) என்பவர் இந்த ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சக்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து செய்யது அப்தாகீரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்