அந்தேரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் திருடி வந்த 5 பேர் கைது

அந்தேரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் திருடி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-08-03 21:45 GMT

மும்பை,

அந்தேரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் திருடி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசாரிடம் சிக்கினார்கள்.

திருட்டு

மும்பை அந்தேரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மகும்பல் பயணிகளிடம் பணப்பை திருட்டில் ஈடுபட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் அந்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் ரெயில் நிலைய பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில், தனித்தனி நேரங்களில் 5 ஆசாமிகள் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டிருந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

5 பேர் கைது

இந்தநிலையில், அந்தேரி மெட்ரோ நிலைய பகுதியில் சுற்றிதிரிந்த அவர்கள் 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் டெல்லியை சேர்ந்த அரவிந்த்குமார் மாலிக்(வயது27), சத்யம் பாண்டே(25) மற்றும் மும்பை காட்கோபரை சேர்ந்த அஷ்பாக் சேக்(36), விக்ரோலியை சேச்ந்த பிரவின் புஜாரி(27), தானே மும்ராவை சேர்ந்த திலாவர் கான்(40) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களில் டெல்லியை சேர்ந்த இருவரும் மும்பையில் ஓட்டல் அறை எடுத்து தங்கியிருந்து மெட்ரோ ரெயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்