டீ வியாபாரி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
டீ வியாபாரி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன்(வயது40). சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வந்தார். ராமநாதபுரம் விவேகானந்தர்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). இவரும் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் டீ வியாபாரம் செய்வதில் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி கர்ணன் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் தான் விற்பனை செய்யும் பகுதியில் வந்து டீ வியாபாரம் செய்கிறாயே என்று கேட்டு தகராறு செய்ததுடன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கர்ணனை குத்தினார். இதில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கர்ணன் அங்கு இறந்து போனார்.
இந்த சம்பவம் தொடர்பாக பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் தொழில் போட்டியில் கொலை செய்த ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேஷ் ஆஜரானார்.