ஆடிப்பெருக்கையொட்டி திண்டுக்கல் கோட்டை குளத்தில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் கோட்டை குளத்தில், ஆடிப்பெருக்கை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல்,
தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை, அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர். ஆடியில் பூமாதேவி அவதரித்தது மட்டுமின்றி, விரதங்கள், பண்டிகைகள் ஒவ்வொன்றாக இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்குகின்றன. ஆடி செவ்வாய் விரதம், மாங்கல்ய பலத்தை கூட்டும். ஆடி வெள்ளி விரதம் திருமண யோகத்தை கொடுக்கும்.
இதுதவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் தான் வருகின்றன. ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றை பெண்கள் கங்காதேவியாக நினைத்து வணங்குவர். ஆறு பெருக்கெடுத்து ஓடுவதைப்போல தங்களது குடும்பமும் அனைத்து நன்மைகளும் பெற்று வளமாக வாழ பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை கட்டிக்கொள்வார்கள்.
கோட்டைக்குளத்தில்...
இத்தகைய சிறப்பு பெற்ற ஆடிப்பெருக்கான நேற்று மாலையில், திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் பெண்கள் குடும்பத்தோடு கோட்டை குளத்திற்கு வந்தனர். குளக்கரையில் வாழைஇலை விரித்து, அதில் மஞ்சளால் உருவாக்கிய கங்காதேவி, காதோலை கருகமணி, தேங்காய், பூ, பழங்கள், வெல்லம் கலந்த அரிசி, திருமாங்கல்ய கயிறு ஆகியவற்றை வைத்து, எலுமிச்சம்பழ விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதன்பிறகு சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் புதிய திருமாங்கல்ய சரட்டை கட்டிக்கொண்டனர். ஆண்கள், திருமணமாகாத பெண்கள் கைகளில் மஞ்சள் கயிற்றை கட்டிக்கொண்டு, அம்மனுக்கு படைத்த பிரசாத பொருட்களை அனைவருக்கும் வழங்கினர். அதன்பிறகு எலுமிச்சம்பழ விளக்கை குளத்தில் மிதக்க விட்டனர்.
ஆஞ்சநேயர் கோவில்
ஆடிப்பெருக்கான நேற்று மலைக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில், காலையில் சுவாமிக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மாலையில் செந்தூர காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோவில், பழனிரோடு செல்லாண்டியம்மன் கோவில், கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன் கோவில், சந்தைரோடு புவனேசுவரி அம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அம்மனின் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
பழனி
பழனி பெரியாவுடையார் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி காலை 11 மணிக்கு நடராஜர் மண்டபத்தில் 2 கலசங்கள் வைத்து விநாயகர்பூஜை, புன்யாக வாஜனம், கலசபூஜை, சிவயாகம், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து மூலவருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு ஆராதனையும், அலங்காரமும் நடத்தப்பட்டது. பின்னர் அஸ்திரதேவருடன் மேள தாளம் முழங்க மாவிளக்கு, தீ பந்தத்துடன், சண்முகநதி ஆற்றங்கரையில் கன்னிமார் பூஜை நடந்தது.
ஆற்று மணலால் 7 கன்னிமார் வடிவம் செய்யப்பட்டு அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு மலர்மாலை அணிவித்து மாவிளக்கு வைத்து மழைவளம் பெருகவும், உலக நலன் வேண்டியும் வழிபாடு நடைபெற்றது. பூஜைகளை செல்வ சுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சியில் தலையுத்து அருவியில் ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான பக்தர்கள் நீராடிவிட்டு அங்குள்ள காசி விஸ்வநாதர், நீளவரதராஜ பெருமாள் மற்றும் கன்னிமார், கருப்பணசாமி கோவில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது பரப்பலாறு வறண்டதால் அருவியில் தண்ணீர் இல்லை. இதையடுத்து அங்குள்ள தோட்டத்துச்சாலையில் தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் பக்தர்கள் நீராடி வழிபாடு நடத்தினர். பெண்கள் புதிய தாலிக்கயிறும் மாற்றிக்கொண்டனர். இதே போல் சாணார்பட்டியை அடுத்த அஞ்சுகுளிப்பட்டியை அருகே உள்ள படுகைகாட்டுர் வெள்ளையம்மாள் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் கிடாவெட்டியும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.