திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு;
திருவரங்குளம்,
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கொத்தக்கோட்டை ஊராட்சி, வம்பன் 4 ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை பணி, குப்பக்குடியில் தாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, மொட்டமான்கொல்லையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சூரன்விடுதியில் பொது நிதியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, கூலச்சிக்கொல்லையில் 50 ஆயிரம் எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளையும், குலமங்களம் வடக்கு ஊராட்சி, அண்ணாநகரில் பொது நிதியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகிராமன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.