கண்ணமங்கலம் அருகே தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தொடக்க விழா

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

Update: 2017-08-03 21:30 GMT

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நளினிமனோகரன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஜி.சந்திரநாதன் வரவேற்றார்.

விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் போளூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் கே.எஸ்.மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.அமரேசன், உதவி தலைமை ஆசிரியர் ஆ.சவுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் கவுன்சிலர்கள் துரை, சசிகுமார், முனியம்மாள் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர்கள் அன்பழகன், கணேசன், சேகர், முன்னாள் அறங்காவலர் முத்துக்கண்ணு, கிளை செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்