பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் கலெக்டரிடம் வலியுறுத்தல்

பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

Update: 2017-08-03 21:30 GMT

நெல்லை,

பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

கலெக்டரிடம் மனு

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் அம்பை ஒன்றிய செயலாளர் சிவகுருநாதன், நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், நெல்லை பாராளுமன்ற தொகுதி இளைஞர்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.பி.துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், விவசாய சங்க செயலாளர் கசமுத்து உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் அம்பை, சேரன்மாதேவி ஆகிய தாலுகாகளில் வடக்கு, தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன் ஆகிய கால்வாய்களில் இருந்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1–ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

தண்ணீர் திறந்து விட வேண்டும்

கடந்த 2 ஆண்டுகளாக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. கடந்த காலங்களில் பாபநாசம் அணையில் 30 அடி தண்ணீர் இருந்த போதும் கூட விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது பாபநாசம் அணையில் 51 அடி தண்ணீர் இருப்பதால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

தண்ணீர் திறந்தால் அம்பை, சேரன்மாதேவி தாலுகாகளில் உள்ள குளங்களில் தண்ணீர் சேமித்து விவசாயம் செய்ய வசதியாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்