திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு முதல் – அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசு வழங்கினார்.

Update: 2017-08-03 21:45 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 2016–17–ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடியாகவும், டாம் சிட்கோ, டாம்கோ திட்டத்தின் நிதி உதவியுடன் ரூ.80 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் சுய உதவிக் குழுக்களுக்கு 2–வதாக அதிக அளவில் கடன் வழங்கியதற்காக நபார்டு வங்கியின் பரிந்துரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு முதல் – அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பரிசு வழங்கினார். பரிசினை வங்கியின் சார்பாக மேலாண்மை இயக்குனரும், இணை பதிவாளருமான வே.நந்தகுமார் பெற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகள்