திருவண்ணாமலையில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் சலவை தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக் கோரி திருவண்ணாமலை சலவை தொழிலாளர் நலக்குழு சார்பில், திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சலவை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் சண்முகம், ஜனதாதள தொழிலாளர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் சசாங்கன், சலவை தொழிலாளர் நலக்குழு தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.