குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே தேவஸ்தானம் ஊராட்சி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.;

Update: 2017-08-03 22:30 GMT

வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே தேவஸ்தானம் ஊராட்சி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய ஆணையாளரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வாணியம்பாடி – அம்பலூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம் ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமார், ஒரு வாரத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அரசு பஸ்சை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்