வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-08-02 23:00 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் சித்திரை கிராமத்தை சேர்ந்த ராஜீ ( 25) என்பவருடன் கடந்த 29-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்களால் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ரமேஷ் உடன் சென்ற ராஜீயின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரமேஷ் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அவருக்கு உதவியாக ராஜீ இருந்து வந்தார்.

10 பேர் கைது

ரமேஷின் தொழிலுக்கு போட்டியாக ராஜீ செயல்பட தொடங்கினார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதுவே தகராறாக மாறியது. இதன் தொடர்ச்சியாக ராஜீ, ரமேசை கொலை செய்ய தீர்மானித்தார். இதையடுத்து ராஜீ ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (24), சரத்குமார்(25), திருநாவுக்கரசு (26), கார்த்திக் (24), ஸ்டீபன்(25), வினோத்(26), ரகுபதி (26) காத்தவராயன் (27), விஜயகாந்த் (26) ஆகியோருடன் சேர்ந்து ரமேசை தன்னுடைய உறவினர் வீடான மலைப்பட்டுக்கு அழைத்துச் சென்றார்.

பிள்ளைப்பாக்கம் அருகே செல்லும்போது ரமேசை கொலை செய்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் தெரியவந்தது. இதை தொடர்ந்து கொலை வழக்கில் 10 பேரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்