வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலாஜாபாத்தை அடுத்த கட்டவாக்கத்தை சேர்ந்த வாலிபர் பலி.

Update: 2017-08-02 22:30 GMT
வாலாஜாபாத்,

வாலாஜாபாத்தை அடுத்த கட்டவாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 21). இவர் கட்டவாக்கம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கட்டவாக்கத்தை சேர்ந்த ரேணுகா (35) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சந்திரசேகர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காயம் அடைந்த ரேணுகா சிகிச்சைக்காக வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்