சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது

16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது.;

Update: 2017-08-02 21:37 GMT
செங்கல்பட்டு,

மதுராந்தகம் தாலுகா நட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 20). படாளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த சிறுமியை தாய் வீட்டுக்கு சென்று விடும்படி பிரேம்குமார், அவரது தாயார் செல்வி, உறவினர் சரவணன் (31) ஆகியோர் அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளனர்.

இது குறித்து அந்த சிறுமி செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவிகா வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரேம்குமாரை கைது செய்தார். சிறுமியை துன்புறுத்திய வழக்கில் சரவணனை கைது செய்தார். மேலும் தலைமறைவான செல்வியை தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்