ஆவடி அருகே சுண்ணாம்பு குளம் தூர்வாரும் பணி பாண்டியராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேக்காடு பகுதியில் சுண்ணாம்பு குளம் தூர்வாரும் பணி எம்.எல்.ஏ. க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

Update: 2017-08-02 22:15 GMT
ஆவடி,

ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேக்காடு பகுதியில் உள்ள சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட சுண்ணாம்பு குளம் தூர்வாரும் பணி நேற்று காலை நடைபெற்றது. ஆவடி தொகுதி அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி எம்.எல்.ஏ. க.பாண்டியராஜன், இந்த பணியை தொடங்கிவைத்தார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது.

அப்போது பாண்டியராஜன் எம்.எல்.ஏ. கூறும்போது, “ஆவடி தொகுதியில் 13 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக இந்த குளம் தூர்வாரப்படுகிறது. பசுமை ஆவடியாக மாற்றும் நோக்கத்தோடு பருத்திப்பட்டு ஏரியை சுற்றுலா தலமாக மாற்றி படகு விடும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இப்பணிகள் சிறப்பாக நடக்கிறது” என்றார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள இந்துக்கல்லூரி ரெயில் நிலையத்துக்கு சென்ற எம்.எல்.ஏ. அங்கு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து ஜே.பி. எஸ்டேட் பகுதியில் உள்ள தாமரை குளத்தில் உள்ள கழிவு நீரை அகற்றும் பணியை பார்வையிட்டார். 

மேலும் செய்திகள்