தார்சாலை அமைக்க விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மனு

தார்சாலை அமைக்க விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் மனு

Update: 2017-08-02 23:00 GMT

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள கல்லாங்குளம் ஊராட்சி பணங்காட்டில் இருந்து போதமலை அடிவாரம் செந்தலாங்குட்டை வரை ஏற்கனவே இருந்த மண்சாலையை தார்சாலையாக மாற்ற கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. அப்போது நில அளவீட்டில் தவறு நடந்திருப்பதாக கூறி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தார்சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்று மனு அளித்தனர். அந்த மனுவில், “ஊராட்சி நிர்வாகத்தின் பல்வேறு பணிகள் குறிப்பிட்ட சில தனிநபர்களால் தடுக்கப்பட்டு இருக்கிறது. தார்சாலையை அமைக்கவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்