லாரி–கல்லூரி பஸ் மோதல்; மாணவிகள் உள்பட 4 பேர் காயம்
லாரி–கல்லூரி பஸ் மோதல்; மாணவிகள் உள்பட 4 பேர் காயம்;
ராயக்கோட்டை,
தர்மபுரியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பஸ் நேற்று முன்தினம் மாணவிகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. வழியில் உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது ராயக்கோட்டையில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி வந்த லாரியும், கல்லூரி பஸ்சும் மோதியது. இதில் பஸ் டிரைவர் ராஜேந்திரன், கல்லூரி மாணவிகள் வாசவி, அர்ச்சனா, சத்யபிரியா ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.