நாகை நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்,
நாகை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பாரதம் இயக்கம் 2015-16-ம் ஆண்டின் கீழ் ரூ.4.83 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளையும், அரசு மருத்துவமனையில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் வருபவர்களுக்கான ஓய்வறை அமைக்கும் பணிகளையும், வெளிப்பாளையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள இடைநிலை நீரேற்ற நிலையத்தின் நீரேற்ற குழாய் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் நாகை - அக்கரைப்பேட்டை இணைப்பு ரெயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இணைய வழியில் பதிவேற்றம்
அதைத்தொடர்ந்து நாகை புதிய பஸ் நிலையத்தினை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்கள் பயன்படுத்தும் நகராட்சி கழிவறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தினை சுற்றியுள்ள பாதுகாப்பு சுவரை சரிசெய்ய வேண்டும். பஸ் நிறுத்தும் இடங்களில் இடையூறாக அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் நாகை நகராட்சி அலுவலகத்திலுள்ள பொது இ-சேவை மையத்தினை பார்வையிட்டு, அங்கு பொது மக்களின் சான்றிதழ் விண்ணப்பங்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்து, மக்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த சான்றிதழ்கள் எவ்வித தாமதமுமின்றி கிடைத்திடும் வகையில் பணிகளை முடிக்குமாறு பணியாளர்களை அறிவுறுத்தினார். பின்னர் நாகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி இணைக்கப்பட்டிருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களை பார்வையிட்டார். ஆய்வின் போது நகராட்சி பொறியாளர்் ராதா, உதவி பொறியாளர் வசந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.