பயிர் காப்பீட்டுத் தொகை பெற விவசாயிகள் வங்கி விவரங்களை கூட்டுறவு சங்கங்களில் கொடுக்க வேண்டும்

பயிர் காப்பீட்டுத் தொகை பெற விவசாயிகள் வங்கி விவரங்களை கூட்டுறவு சங்கங்களில் கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-02 22:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– சிவகங்கை மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயில் காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறாமல் பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகள் தங்களுக்குரிய இழப்பீட்டு தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க வசதியாக வங்கி விவரங்களை தெரிவிக்கவேண்டும்.

இதன்படி செல்போன் எண், ஆதார் அட்டை நகல், சேமிப்பு கணக்கு எண், வங்கி கிளை மற்றும் ஐ.எப்.எஸ். எண்ணுடன் கூடிய சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் உள்ளிட்ட வங்கி கணக்கு விவரங்களை தாங்கள் காப்பீட்டு பிரிமியம் செலுத்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 2 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்