மனைவியை சித்ரவதை செய்த கணவர் கைது
திருவண்ணாமலையை அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 30), தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (21).
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 30), தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (21). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லிங்கேஸ்வரன், பழனியம்மாளை தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லிங்கேஸ்வரனை கைது செய்தனர்.