நடிகை கொய்னா மித்ராவுக்கு போனில் பாலியல் தொல்லை மர்மஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

நடிகை கொய்னா மித்ராவுக்கு போனில் பாலியல் தொல்லை கொடுத்த மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-01 22:05 GMT

மும்பை,

நடிகை கொய்னா மித்ராவுக்கு போனில் பாலியல் தொல்லை கொடுத்த மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நடிகை

இந்தி நடிகை கொய்னா மித்ரா ஓஷிவாராவில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் ஒரு செல்போனில் இருந்து பலமுறை அழைப்பு வந்து உள்ளது. தெரியாத எண் என்பதால் அதை ஏற்று பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அவர் வீட்டில் இருந்த போது அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று அவர் பேசினார். அப்போது மறுமுனையில் மர்மஆசாமி ஒருவர் பேசினார்.

மர்மஆசாமிக்கு வலைவீச்சு

அவர் நடிகையிடம் என்னுடன் ஒரு இரவு தங்க வேண்டும் என்றும், அதற்கான பணத்தை கொடுத்து விடுவதாகவும் கூறி மிகவும் ஆபாசமாக பேசி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை கொய்னா மித்ரா ஓஷிவாரா போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருக்கு போனில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்