வத்தலக்குண்டு, பழனியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-08-01 21:45 GMT

பழனி,

புதிய தமிழகம் கட்சி சார்பில், நீட்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தி பழனி ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பேச்சிமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்குமாவட்ட நிர்வாகி சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சவுந்தராஜன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்