வேடசந்தூரில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-08-01 22:00 GMT

வேடசந்தூர்,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வசந்தாமணி, பொருளாளர் அருள்செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். வேடசந்தூர் தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் துரைக்கண்ணன் உள்பட பலர் கொண்டனர்.

மேலும் செய்திகள்