புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதியான சென்னை குரோம்பேட்டை சென்ட்ரல் பேங்க் காலனியை சேர்ந்தவர் தற்கொலை முயற்சி.
செங்குன்றம்,
சென்னை குரோம்பேட்டை சென்ட்ரல் பேங்க் காலனியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 29). கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குரோம்பேட்டையில் நடந்த கொலை வழக்கில் கைதான இவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று காலை, தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் கழிவறையில் இருந்த பிளிச்சிங் பவுடரை நீரில் கலக்கி குடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சிறை அதிகாரிகள் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்தோணிராஜை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புழல் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.