அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு தீவிர சிகிச்சை
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று மருத்துவமனையின் ‘டீன்’ (பொறுப்பு) டாக்டர் அனிதா தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனை ‘டீன்’ (பொறுப்பு) டாக்டர் அனிதா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 149 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 குழந்தைகள் உள்பட 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களை தனிப்பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 2 பேரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கை வந்த பிறகு தான் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருக்கிறதா? என்பது தெரியவரும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேரில் திருச்சி மாநகரத்தை சேர்ந்த 2 பேரும், திருச்சி புறநகரை சேர்ந்த 18 பேரும் அடங்குவர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே மருத்துவக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கொசு ஒழிப்பு பணியில் உள்ளாட்சி பணியாளர்களுடன் இணைந்து பொதுமக்கள் பணியாற்ற வேண்டும். மேலும் திருச்சி அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கியில் 1,108 யூனிட் ரத்தம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்பட்டாலும் அரசு மருத்துவமனையில் வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.