தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ–மாணவிகள் உண்ணாவிரத போராட்டம்.

Update: 2017-08-01 21:45 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகிலுள்ள விஜயகரிசல்குளத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. உயர்நிலைப்பள்ளியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் 600–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தேவர்சிலை அருகில் நடந்த உண்ணாவிரதத்துக்கு பெற்றோர் ஆசிரியார் கழக தலைவர் கனி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துதேவர், வெம்பக்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவெ ராவிசங்கர், ஏழாயிரம்பண்ணை அரசு பள்ளி பெற்பெறோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன் மற்றும் ஆறுமுகச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் குறித்து போராட்டக்குழுவினர் கூறுகையில், மாணவ–மாணவியர் எளிதில் வந்து செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்படவேண்டும், தரம் உயர்த்தப்பட்ட நிலையில் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும், போதுமான பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதோடு வாகன் நிறுத்துமிடம் அமைக்கா வேண்டும், குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் அவை நிறைவேற்றப்படாததால் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

கிராமப்புற மாணவ–மாணவிகளின் நலனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள்.

மேலும் செய்திகள்