ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை–பணம் கொள்ளை

புதுக்கடை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை– பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-08-01 22:15 GMT
புதுக்கடை,

புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகளை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

கடந்த 30–ந் தேதி முருகேசனும், அவரது மனைவியும் திருவனந்தபுரத்தில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு இரண்டு நாட்கள் தங்கிய பின்பு நேற்று வீட்டுக்கு திரும்பினர். நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த முருகேசன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

நகை– பணம் கொள்ளை

மேலும், மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கபட்டிருந்தது.

யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து முருகேசன் புதுக்கடை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்