பெரும்பாறை அருகே ‘செல்பி’ மோகத்தால் உயிரிழப்பு அபாயம்
பெரும்பாறை அருகே சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் புல்லாவெளி கிராமம் உள்ளது.
பெரும்பாறை,
அதன் அருகே கொடகனார் ஆற்றில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடத்தில் எப்போது அமைதி தவழ்ந்து கொண்டிருக்கும். இங்கு கொக்குபாறை என்ற இடம் சுற்றுலா பயணிகளை கவருவதாக இருக்கிறது. நறுமண சுற்றுலா தலமான தடியன்குடிசைக்கு வருகிற சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும் கொடகனார் ஆற்றில் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக் கின்றனர். ஆனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்றுவர முறையான பாதை வசதி இல்லை. இதனால் பாறைகளை பிடித்தபடி அங்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இதனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தூரத்தில் இருந்தபடியே நீர்வீழ்ச்சியின் அழகை பலர் ரசித்து செல்கின்றனர்.இதேபோல் மீனாட்சி ஊத்து என்ற இடத்தின் அருகே ஒரு பாறை உள்ளது.
அதன் அருகே நெஞ்சை நிலைகுலைய செய்யும் சுமார் 1,500 அடி பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பாறையில் நின்றபடி மலையின் தோற்றத்தை ‘செல்பி’ எடுத்து மகிழ்கின்றனர். இதனால் அவர்கள் பள்ளத்தாக்குக்குள் உருண்டு விழுந்து உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, எந்த ஆபத்தும் இல்லாத வகையில் அந்த இடத்தை சுற்றுலா பயணிகள் ரசிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.