மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
புளியங்குடி அருகே கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் குழந்தைராஜ் (வயது 36). இவருடைய மனைவி உமாதேவி (33). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் ஆனபிறகு குழந்தைராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அதன்பின்னர் ஊருக்கு திரும்பி வந்து கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் குழந்தை ராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மனைவி கொலை
இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் 4–ந்தேதி குழந்தைராஜ், மனைவி உமாதேவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணைக்கு குளிக்க சென்றார். ஆனால் அதன்பிறகு குழந்தைராஜ் மட்டுமே வீடு திரும்பினார். பின்னர் புளியங்குடி போலீஸ் நிலையத்தில், தன்னுடைய மனைவியை காணவில்லை என்று குழந்தைராஜ் ஒரு புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாதேவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து 6–ந்தேதி தலையணை பகுதியில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் காணாமல் போன உமாதேவி என்பது தெரியவந்தது.
இதற்கிடையே உமா தேவி உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்களது அறிக்கையில், உமா தேவி கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குழந்தை ராஜிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் குழந்தை ராஜ் உமா தேவியை குளிக்க அழைத்துச் சென்று, தலையணை பகுதியில் துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, முட்புதரில் உடலை வீசியதும், அதன் பிறகு மனைவியை காணவில்லை என்று நாடகம் ஆடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குழந்தை ராஜை போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி ராஜசேகர் வழக்கை விசாரித்து குழந்தை ராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து ஆஜரானார்.