பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேச்சு
நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று பூம்புகாரில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
திருவெண்காடு,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் கடந்த 28-ந் தேதி காவிரி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார பயணத்தை பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கினார். இந்த பிரசார பயணம் நேற்று முன்தினம் இரவு பூம்புகாரில் முடிவடைந்தது. பின்னர் நடைபெற்ற காவிரி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, விவசாய சங்க தலைவர் தனபாலன், இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா, மாநில துணை தலைவர் அய்யாசாமி, முன்னாள் மாநில நிர்வாகி அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது கூறியதாவது:-
காவிரியை பாதுகாக்க 3 நாள் பிரசார பயணம் பா.ம.க. சார்பில் மேற்கொண்டோம். இந்த பயணத்தின் நோக்கம் மக்களுக்கு காவிரி பற்றி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே ஆகும். இன்னும் 50 ஆண்டுகளில் காவிரி தமிழகத்தில் இருந்தது குறித்து பாடபுத்தகங்களை பார்த்து தான் தெரிந்து கொள்ளும் அவலநிலை ஏற்படும். இதனை தவிர்க்க காவிரியை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த பயணத்தை நாங்கள் ஓட்டுக்காகவோ, பணத்துக்காகவோ மேற்கொள்ளவில்லை. காவிரி ஒப்பந்தத்தை முன்புள்ள தி.மு.க. ஆட்சியில் புதுப்பிக்காதது தான் காவிரி பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும். மேகதாதுவில் அணை கட்ட பா.ம.க. ஒருபோதும் விடாது. தற்போது தமிழகத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 68 மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, விரைவில் மணல் குவாரிகளை மூட வலியுறுத்தி அந்தந்த பகுதிகளில் உள்ள மணல் குவாரிகள் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் எனது தலைமையில் கடுமையான போராட்டங்களை அரசு சந்திக்க நேரிடும். நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற பிரச்சினைகளுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. தற்போது பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைய உள்ளதற்கும் தி.மு.க. கையெழுத்திட்டது தான் காரணம். எனவே, எப்போதும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி பா.ம.க. தான். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், ராஜ்குமார், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், சங்கர், முரளிராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு தலைவர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.